பூமியின் சுற்றுபுறத்தில் மோத வரும் சிறிய கோள்..!
போயிங் 747 விமானம் அளவிலான சிறிய கோள் ஒன்று நாளை பூமியில் வெளிப்புற சுற்றுப்புற பாதையுடன் மோத வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட 2020 ஆர்கே 2 என்ற சிறிய கோள் பூமியில் இருந்து 23 லட்சத்து 80 ஆயிரம் மைல் தொலைவில் சுற்றுப் பாதையை கடக்கும் என நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 118 முதல் 265 அடி அகலம் கொண்ட இந்த சிறு கோள் வினாடிக்கு அரை கிலோமீட்டர் என்ற வேகத்தில் பயணிப்பதாகவும் பூமியை கடந்து அதிக தூரம் வரை செல்லக் கூடும் என்றும் நாசா மதிப்பிட்டுள்ளது.







