--- --:--:-- --

4 நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு – அமைச்சர் விளக்கம்

2

தூத்துக்குடியில் கடந்த நான்கு தினங்களாக பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாள்தோறும் சுமார் 38 ஆயிரம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

ஆனால் கடந்த நான்கு தினங்களாக பத்தாயிரம் லிட்டருக்கும் குறைவாகவே பால் விநியோகம் செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கிடைக்க வேண்டிய பால் தாமதமாக காலை 9 மணிக்கு விநியோகம் செய்யப்பட்டது.

 

திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி ஆவின் அலுவலகத்தில் அமைச்சர் நாசர் சமூக நலத்துறை அமைச்சருக்கு கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாசர் தற்போதைய கட்டமைப்பு, சூழல், நிலை காரணமாக பால் உற்பத்தி குறைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

 

Right Menu Icon