மது போதையில் மின்வாரிய ஊழியர்..ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சி காட்சி..!
தூத்துக்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட உறவினரின் வீடியோ வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா சூரங்குடி மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுபோதையில் அலப்பறையில் ஈடுபட்டுள்ளார்.
மின் பகிரமான உதவி பொறியாளர் ஜோசப் சுந்தர் என்பவரையும் மின்கட்டணம் செலுத்த வந்த பொது மக்களையும் தரக்குறைவாக பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் மின்வாரிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






