--- --:--:-- --

அடர்ந்த காட்டில் ஆம்புலன்சில் பிறந்த குழந்தை..!

2

ரோட்டுக்கு அருகே ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட கருவுற்ற பெண்ணுக்கு செல்லும் வழியிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

அந்தியூரை எடுத்த சோளக்கணை மலை கிராமத்தில் நிறைமாத கருவுற்ற பெண்ணான மலருக்கு திடீர் என்று பிரசார வலி ஏற்படவே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடர்ந்த காடுகள் வழியே சென்று கொண்டிருந்த பொழுது பிரசவ வலி அதிகமாகதால் காட்டுப்பாதையில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இதனையடுத்து ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்தது. அதையடுத்து தாயும், சேயும் பர்கூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர் மற்றும் மருத்துவர் உட்பட பலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

Right Menu Icon