--- --:--:-- --

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

3

லக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் ஏழுமலையான் கோயிலை போலவே அங்கு வழங்கப்படும் லட்டு தனி சிறப்பு வாய்ந்தது. அப்படி இங்கே வரும் பக்தர்களுக்கு இலவசமாகவே லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வாங்கும் பக்தர்கள் பணம் கட்டி டோக்கன் பெற்று வாங்கி கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (YSRCP) ஆட்சியில் இருந்தபோது, ​​திருப்பதி லட்டு தயாரிப்பில் சுத்தமான நெய்க்குப் பதிலாக ‘விலங்கு கொழுப்பு’ கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய போது, இந்த சர்ச்சை தொடங்கியது.

 

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயிலில் இருந்து வழங்கப்படுவது புனிதம் என்று நினைத்து பலரும் லட்டுவை பல வருடங்களாக சாப்பிட்டு வந்த நிலையில், இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

தற்போது விசாரணையில் மேலும் ஒரு ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திருமலை திருப்பதி தேவஸ்தானங்களுக்கு (TTD) 60 மாதங்களில் அல்லது ஐந்து ஆண்டுகளில் 6.8 மில்லியன் கிலோ கிராம் கலப்பட நெய்யை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நடத்திய விசாரணையில், உத்தரகண்டில் உள்ள ஒரு பால் நிறுவனம் 2019 மற்றும் 2024 க்கு இடையில் TTD-க்கு 6.8 மில்லியன் கிலோகிராம் நெய்யை வழங்கியது தெரியவந்துள்ளது, இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி. அதிர்ச்சியூட்டும் வகையில், பால் நிறுவனம் எந்த மூலத்திலிருந்தும் பால் அல்லது வெண்ணெய் வாங்கவில்லை. இதை கேட்ட பக்தர்கள் திகைத்து நிற்கின்றனர்.

Right Menu Icon