வெஜ் பப்சில் கிடந்த கரப்பான் பூச்சியால் அதிர்ச்சி..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செயல்பட்டு வரும் பேக்கரியில் பப்சில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள் மற்றும் பேக்கரியை உணவு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டம் பைபாஸ் அறையில் செயல்பட்டு வரும் பிரபல பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய வெஜ் பப்சில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார். ஆய்வு செய்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சுட்டிக்காட்டி நோட்டீஸும் வழங்கியுள்ளார்.





