குலோப் ஜாமுன் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம்..!
திருப்பத்தூர் அருகே பேக்கரியில் குலோப் ஜாமுன் சாப்பிட்டு 7 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது திருப்பத்தூர் அருகே உள்ள பேக்கரியில் குலோப் ஜாமுன் சாப்பிட்டு உள்ளனர். குலோப் ஜாமுன் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட 7 குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பேக்கரியின் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழைய பொருட்களை விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்ட பேக்கரி உரிமையாளர் அவரிடம் மன்னிப்பு கூறினார் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.





