நாக்கில் செய்ய வேண்டிய ஆபரேஷனை கவனக்குறைவாக பிறப்புறுப்பில் செய்ததால் அதிர்ச்சி..!
உத்திரபிரதேசத்தில் நாக்கில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு பிறப்புறுப்பின் தோலை நீக்கிய மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் இரண்டரை வயது சிறுவன் ஒருவன் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். ஆனால் மருத்துவர்கள் கவனக்குறைவாக அவனது பிறப்புறுப்பின் தோல் பகுதியை நீக்கினார்.
இதனால் அந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தும் படி துணை முதலமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் மருத்துவமனையில் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.





