--- --:--:-- --

ஜூலை 1ம் தேதி வரை மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

9

மிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் அந்த பகுதி மக்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon