--- --:--:-- --

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. உடற்கல்வி ஆசிரியர் அத்துமீறல்..!

6

கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர் ஆனந்தகுமார்.

 

இவர் கடந்த சில மாதங்களாக அந்த பள்ளியில் படிக்கும் சில மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி முதன்மை கல்வி அலுவலரிடமும் பெற்றோர்கள் புகார் செய்தனர்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய முதன்மை கல்வி அலுவலர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆனந்த குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon