கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மயக்கம்..!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் சாலையோர கடையில் இரண்டு ரூபாய்க்கு விற்ற கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளிக்கு செல்லும் வழியில் வாங்கி குடித்த நிலையில் வகுப்பறையில் மயக்கமடைந்தார் மாணவி.
எனவே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளியின் முன்பு உள்ள சாலையோர கடைகளில் ஆய்வு செய்துவருகின்றனர். கடைகளில் விற்பனை செய்து வந்த தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





