--- --:--:-- --

3வது முறையாக ஈபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்..!

2

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தொடர்ந்து 3ஆவது நாளாக குறிப்பிட்டு பேசாமல் செங்கோட்டையன் தவிர்த்தது மர்மமாகவே இருக்கிறது. அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108ஆம் ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

 

புதன்கிழமை ஈரோடு நல்லகவுண்டம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “தன்னை சோதிக்க வேண்டாம்” என்று கூறினார். மேலும் சுமார் 250 நிர்வாகிகள், தொண்டர்களின் பெயரை 10 நிமிடங்களுக்கு படித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடவில்லை.

 

இந்த நிலையில் வியாழக்கிழமை அத்தாணியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தலில் அதிமுக தோல்வியடைய துரோகிகளே காரணம் என்று கூறியதுடன் ஒரு முறை கூட எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடவில்லை.

 

செங்கோட்டையனின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தாம் கூறிய “துரோகிகள்” என்ற கருத்துகள் அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தமிழகம் முழுவதும் இல்லை என்றும் அவர் நேற்று விளக்கமளித்தார்.இந்த சூழலில் பவானிசாகர் அடுத்து புங்கம்பள்ளியில் எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை செங்கோட்டையன் பங்கேற்று பேசினார்.

 

அப்போது, “எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கப்பலாக இருந்து கட்சியை ஜெயலலிதா வழிநடத்திச்சென்றார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தெய்வங்கள் என்றும், அவர்கள் இல்லையெனில் தாங்கள் யாரும் மேடையில் இருந்திருக்க முடியாது” என்றார். மேலும், “தொண்டர்களின் ஆசை நிறைவேறும் காலம் கூடிய விரைவில் வரும்” என்றார்.

 

மேலும் 3வது முறையாக இந்த கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை செங்கோட்டையன் குறிப்பிடவில்லை. 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளின் பெயர்களை படித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் கட்சியின் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் என்றே குறிப்பிட்டார்.

 

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி, “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மிகப்பெரிய அரசியல் அனுபவம் கொண்டவர்” என்றும், “செங்கோட்டையனை ஜெயலலிதாவும், அவருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் மதிப்புடன் நடத்துவதாக” கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon