--- --:--:-- --

கோவில்பட்டி புறவழிச் சாலையில் காரில் வந்த நபர்களிடம் இருந்து துப்பாக்கி,தோட்டாக்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

9.1

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் புறவழிச்சாலையில் தொட்டிலேவான்பட்டி சோதனை சாவடி உள்ளது சாவடியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்… அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

 

அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் போலீசார் காரை சோதனையிட்டபோது காரில் ஒரு துப்பாக்கி 5 தோட்டோக்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் காரில் இருந்துள்ளது.

உடனியாக காரில் பயணம் செய்த திருநெல்வேலி மாநகர பகுதிகளைச் சேர்ந்த ராஜ்குமார், வினோத்குமார் ,சுரேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர் இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இவர்கள் காரில் ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு செல்வதும் ராஜ்குமார் மீது 3 கொலை வழக்குகள் வினோத் குமார் மீது 2 கொலை வழக்குகள் சுரேந்திரன் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

 

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் இன்ஸ்பெக்டர் சுதேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon