கொரொனா தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது..!
கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டம் கொரொனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது.
இருந்தாலும் அவை சோதனைகளில் இருந்து வருகின்றன. இந்தியாவில் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தை இந்தியா கண்டுபிடித்துள்ளது. தற்போது முதல் கட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தடுப்பூசி தயாராகி விடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியால் கொரோனாவில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்க முடியும் என மதிப்பிடப்படுகிறது.
ஆனால் இந்த நிறுவனம் முதற்கட்ட பரிசோதனை குறித்து எந்த முடிவையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் கொடுத்துள்ளதாகவும் இதுகுறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.






