ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆளுநர் பொறுப்பு ஏற்பாரா என கேட்கும் சீமான்..!
ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது ஜனநாயக படுகொலை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டாலும் அவன் குடும்ப பொருளாதாரத்தில் நலிவடைந்தாலும் ஆளுநர் பொறுப்பேற்றுக் கொள்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது ஆன்லைன் சூதாட்டம் தொடர்புடைய பிரச்சினை மட்டும் இல்லை என குறிப்பிட்டுள்ள சீமான் மாநிலத்தின் தன்னுரிமை சார்ந்த பிரச்சினை எனவும் தெரிவித்துள்ளார். எனவே தமிழக அரசியல் போக்கை மேற்கொள்ளாமல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நிலைப்படுத்த சட்டப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





