--- --:--:-- --

நாட்டில் நடப்பதை பார்த்தாலே ஜனநாயகத்தில் இந்தியா பின்தங்கியது ஏன் என புரியும்

11.1

ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளதாக வந்துள்ள செய்தி உலகுக்கு அபாய ஒலியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 

உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் எக்கனாமிக்ஸ் இன்டல்லைஜன்ஸ் யூனிட் தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டு 41வது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை 10 இடங்களில் பின்தங்கி 51 ஆவது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதை குறிப்பிட்ட ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப சிதம்பரம் இந்தியா தற்போது செல்லும் பாதையை உலக நாடுகளிடையே அபாய ஒலியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருவதையும் ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்து வருவதையும் நாட்டின் நிகழ்வுகளை கூர்மையாக கவனித்து வருபவர்கள் அறிந்திருப்பர் எனவும் ப சிதம்பரம் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon