--- --:--:-- --

தமிழகத்தில் இன்று முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!

5

மிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற உள்ளன. தொற்று பாதிப்பு இருந்ததால் மார்ச் மாதம் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது பள்ளி திறப்பதற்காக தமிழக அரசு பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர்.

 

இதில் 95% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. அரசு பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப் படுகிறது.

 

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பெரும் தொற்றைத் தடுக்கும் வகையில் பள்ளிகளில் என்னென்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று அரசு சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 26 மாணவர்கள் மட்டுமே அமரலாம். பள்ளி விடுதிகள் திறக்கப்பட்டு மாணவர்களை தங்க வைத்துக் கொள்ளலாம் உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மேலும் பொதுத் தேர்விற்கு தயாராகும் வகையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon