--- --:--:-- --

இளையராஜா பத்ம விபூஷன் விருதை திருப்பி கொடுக்க முடிவு என தவறான தகவல்..!

6

சையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷன் விருதை திருப்பி கொடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் அதனை மறுத்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு விவகாரம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் இளையராஜா எனும் கலைஞனுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார் தினா.

 

இதனால் மத்திய அரசு வழங்கிய பத்ம விபூஷன் விருதை திருப்பி கொடுக்க அவர் முடிவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். இளையராஜா சொல்லாத ஒன்றை அவர் சொன்னதாக தினா ஏன் குறிப்பிட்டார் எனும் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon