தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு..!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.
முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் துவங்கும் நேரம் மற்றும் முடிவடையும் நேரத்தை பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. போக்குவரத்து வசதி போன்றவை குறித்து முடிவெடுக்கலாம் என்றும் 8 பாடவேளைகள் கொண்டதாக பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வரும் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 27ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.






