--- --:--:-- --

தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் – கடலூர் எஸ்பி விளக்கம்

2

டலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்கும்போது தண்டவாளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு மாணவர்கள் காயமடைந்தனர். விருத்தாசலத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 

அவர்களை பள்ளி வேனில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி, இன்று காலை மாத்தூர், பவழங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளியை நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது.

 

கோ பூவனூர் கிராமத்தில் உள்ள ரயில்வே கேட்டைக் கடக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மாணவர்கள் ஆறு பேர் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்து வந்த மக்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது அந்த வழியாக ரயில் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி வேனை வேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon