பள்ளிகள் துவங்கும் நேரம் மீண்டும் மாற்றம்..!
புதுச்சேரியில் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகள் துவங்கும் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9 மணிக்கு பதிலாக 9:15 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 7ம் தேதி முதல் பள்ளி காலை 9.15 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





