திடீரென பிரசவ வலி..டோலி மூலம் தூக்கிச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்..!
குமரி அருகே டோலி மூலம் தூக்கிச் செல்லப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நலம் விசாரித்தார். குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்குள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இந்நிலையில் இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த நபர்கள் டோலி மூலம் அந்த பெண்ணை தூக்கி சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.





