பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் திறப்பு..!
தமிழகத்தில் கொரொனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அமைப்பது குறித்து அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
கல்வி நிலையங்களை பொறுத்தவரை நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பள்ளி, கல்லூரிகள் வாரத்திற்கு ஆறு நாட்களும் செயல்படும் என்றும் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. பள்ளிகளில் மதிய உணவு திட்டம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.






