2,000 கிலோ வெங்காயங்களால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா..!
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயங்களால் அலங்கரிக்கப்பட்ட மணலால் ஆன கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பம் பலரையும் கவர்ந்துள்ளது. பிரபலமான சிற்ப கலைஞரான சுதர்சன் பண்டிகையொட்டி இந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
சுமார் 100 அடி நீளத்தில் மணலால் கிறிஸ்துமஸ் தாத்தா சிறப்பத்தை வடித்து அதன் ஆடைக்கு வெங்காயத்தால் சுதர்சன் அலங்காரம் செய்திருந்தார். இது பூரி கடற்கரையில் வருபவர்களை உற்சாகமாக வரவேற்பது போல் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.





