--- --:--:-- --

தரமற்ற சாலையில் சிக்கிய மணல் லாரி..!

3

துரையில் தரமற்ற போடப்பட்ட சாலையில் மணல் லாரி சிக்கி கொண்டதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை கோமதிபுரம் அம்பிகை நகர் ஒன்றாவது தெருவில் எட்டாவது தெருவில் 15 நாட்களுக்கு முன்னர் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

 

ஆனால் புதிய சாலை தரம் இன்றி போடப்பட்டதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு மீண்டும் சேதமடைந்தன. தரமற்ற சாலையின்றி புதிய சாலை மீண்டும் அமைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக கட்டுமான பணிக்காக மணல் ஏற்றி சென்ற லாரியால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

 

அந்த பள்ளத்தில் மணல் லாரி சிக்கிக் கொண்டது. பின்னர் நீண்ட நேரம் முயற்சிக்கு பிறகு ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon