வாரத்தின் 7 நாட்களிலும் சாமி தரிசனத்திற்கு அனுமதி..!
ராமநாதபுரம் சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீர்த்த குடங்களில் நீராட பக்தர்களுக்கான தடை தொடர்ந்து வருகிறது.
கொரொனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வர அனுமதி அளிக்கப்படவில்லை. தற்பொழுது வாரத்தின் ஏழு நாட்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







