--- --:--:-- --

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கம்..!

6

ராஜஸ்தான் மாநிலம் துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள ஃபெர்மோண்ட் ஹோட்டலில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் அசோக் கேலாட் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரிய விளக்கம் அளிக்கும்படி சச்சின் பைலட்டுக்கு உத்தரவிடப்பட்டும் அவர் கூட்டத்தை புறக்கணித்து விட்டார். இந்நிலையில் அசோக் கேலட் அரசை கவிழ்க்க திட்டமிட்ட சச்சின் பைலட்டை துணை முதல்வர் பொறுப்பிலிருந்தும், கட்சியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று எம்எல்ஏக்கள் பரிந்துரை செய்தனர்.

 

இதையடுத்து துணை முதலமைச்சர் பொறுப்பில் இருந்தும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் இரண்டு பேரும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் மூன்று பேரும் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon