--- --:--:-- --

நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளி…! இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

download (1)

நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் இன்று கூடியது இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கூட்டத்தொடர் கடந்த வாரம் கூடியது. டெல்லி வன்முறை தொடர்பாக கம் குடியுரிமை சட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் ஐந்து நாட்களாக இரு அவைகளும் முடங்கின. மேலும் மக்களவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பேப்பர்களை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதாக காங்கிரசை சேர்ந்த 7 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

இந்நிலையில், கடந்த சனி,ஞாயிறு மற்றும் ஹோலி விடுமுறைக்கு பின் இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. ஆனால், மக்களவை கூடிய உடனே, காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், டெல்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை 12.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

இதேபோன்று மாநிலங்களவையிலும் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. டெல்லி வன்முறை சம்பவத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதாக கூறி இரு மலையாள செய்தி சேனல்களுக்கு இரண்டு நாட்கள் ஒளிபரப்பு தடை விதித்த சம்பவத்திற்கு கேரள எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

Leave a Reply

Right Menu Icon