--- --:--:-- --

டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் இன்று விவாதம்..! மாலை 5 மணிக்கு அமித் ஷா பதிலளிக்கிறார்!!

amitsha

டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடைபெற உள்ளது. முடிவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

டெல்லியில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் பெரும் வன்முறை வெடித்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மற்றும் இச்சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் இடையே நடந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. வரலாறு காணாத இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

 

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து மக்களவையை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு சபைகளும் முடங்கின. கடைசியில் டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு சம்மதித்தது. இதனை, கடந்த வியாழக்கிழமை மக்களவையில் அறிவித்த சபாநாயகர் ஓம்பிர்லா, ஹோலி விடுமுறைக்குப் பின் விவாதம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணிக்கு, டெல்லி வன்முறை தொடர்பாக மக்களவையில் விவாதம் நடைபெறும் எனவும், விவாதத்திற்குப் பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி வன்முறைக்கு மத்திய அரசும், பாஜகவும் தான் காரணம் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இன்று மக்களவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon