தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5,000..!
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மழைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் அரசின் கட்டுமான வாரியத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.





