9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18, 000 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்..!
பிரதமரின் விவசாயிகள் நல நிதி திட்டத்தின் கீழ் வரும் 25ஆம் தேதி 9 கோடி விவசாயிகளின் கணக்கில் 18 ஆயிரம் கோடி வரவு வைக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகளை வரும் 25ஆம் தேதி பிரதமர் மோடி இணையதளம் மூலம் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக இரண்டு கோடி விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து இருக்கின்றனர் என்றும் பிரதமர் விவசாய நலநிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் கணக்கில் 18 ஆயிரம் கோடி வரவு வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







