--- --:--:-- --

இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

1

மிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் ஐம்பெரும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

 

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் 43 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

இதேபோல், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 761 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என கூறினார்.

Right Menu Icon