பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி கைது..!
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 10ஆம் தேதி அம்மன் நகர் பாக்ஸ் காலனி பொது இடத்தில் தனது நண்பருடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது நண்பர்கள் கணேஷ் மற்றும் பாலாஜி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.







