--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 4389 பேருக்கு கொரோனா பாதிப்பு … உயிரிழந்தோர் 57 பேர்

14

மிழகத்தில் இன்று 4389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது.

 

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 5245 ஆகும். இன்னும் சிகிச்சையில் உள்ளவர்கள் 40 ஆயிரத்து 959 ஆகும்.

 

தமிழகத்தில்இன்று மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 57 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 10 ஆயிரத்து 529 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1140 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. கோவையில் 387, செங்கல்பட்டு 261 , சேலம் 244, திருவள்ளூர் 195, திருப்பூர் 147 என இந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon