--- --:--:-- --

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை..!

1

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கடலூரை தொடர்ந்து திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

 

பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை என்றும் உதவிகளும் போய் சேரவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். மத்திய அரசின் உதவிக்காக காத்திருக்காமல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதியுதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

சென்னை புறநகர் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவும், தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon