ஓட்டுனர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் – போக்குவரத்து ஆணையர் விளக்கம்
ரூ.1,000 நிவாரணம் என தமிழக அரசு அறிவிக்கவில்லை என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். வாகன ஓட்டுனர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு போக்குவரத்து ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஓட்டுனர் மற்றும் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் பரவும் விளம்பரம் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தவறான தகவலை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






