காதல் திருமணம் செய்த பெண்ணை பேருந்து நிலையத்தில் வைத்து தாக்கிய உறவினர்கள்..!
காதல் திருமணம் செய்து கணவருடன் வந்த பெண்ணை கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறங்காட்டூர் புது காலனியை சேர்ந்த தமிழ்ச்செல்வியை கடந்த 15ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது தந்தை புகார் கொடுத்திருந்தார்.
தமிழ்ச்செல்வியின் செல்போன் எண்ணை கொண்டு அவரை தேடி வந்த காவல்துறையினர் நாகை மாவட்டத்தில் இருப்பதை அறிந்து சென்ற போது தன்னுடன் வேலை பார்த்த நபரை தமிழ்ச்செல்வி திருமணம் செய்ததை அறிந்தனர்.
இரு வீட்டாரையும் அழைத்து பேசிய காவல்துறையினர் கணவருடன் தமிழ்ச்செல்வியை அனுப்பி வைத்துள்ளனர். தமிழ்ச்செல்வி கணவருடன் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த உறவினர்கள் பெண்ணை பிடித்து தாக்கியுள்ளனர்.
பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்ச்செல்வியை கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.







