மூதாட்டியின் 8 சவரன் தங்க தாலியை பறித்து சென்ற திருடன்..!
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலிச் சங்கிலியை பறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாரபடை வீட்டை சேர்ந்த ராணி என்ற 60 வயது மூதாட்டி கடைக்கு சென்று திரும்பிய போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ராணியின் கழுத்தில் இருந்த 8 சவரன் தாலியை பறித்து விட்டு தள்ளி விட்டு தப்பி சென்றனர்.
கழுத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து ராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ராணி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






