--- --:--:-- --

சிபிஎஸ்சி திட்டத்திற்கு மாற புதுச்சேரி அரசுக்கு வரும் நெருக்கடியே காரணம் : அன்பில் மகேஷ்

7

புதுச்சேரி அரசுக்கு வெளியில் இருந்து வரும் நெருக்கடிகள் காரணமாகவே அங்கு சிபிஎஸ்சி திட்டத்திற்கு மாற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

திருச்சி மாவட்டத்தில் கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

 

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர் புதுச்சேரி அரசுக்கு வெளியிலிருந்து வரும் நெருக்கடிகள் காரணமாகவே அங்கு சிபிஎஸ்சி திட்டத்திற்கு மாற முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் புதுச்சேரியில் திமுக அரசு அமைந்த உடன் இதற்கு முடிவு கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Right Menu Icon