ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறித்து முக்கிய அறிவிப்பு..!
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா பெருந்தொற்று கால பொருளாதார திட்டமிடல் குறித்து டெல்லியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெற்றுக்கொள்ளும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்று அறிவித்தார். இதனால் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முதலீட்டை வங்கிகளிடமிருந்து கடனாக பெறுவது அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் வாகன கடன் அளவு அதிகரிக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.இதேபோல் ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் இருப்பு வைத்துள்ள தொகைக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 3.35 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.







