பட்டுக்கோட்டையில் ரோட்டரி சங்கம்,ஆரம்ப சுகாதார நிலையம்,அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததானமுகாம்
பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை இணைந்து மாபெரும் இரத்ததானமுகாம் இன்று இராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக இரத்ததான முகாமினை ரோட்டரி சங்கத்தின் தலைவர் N.நடராஜன் தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் 100 க்கும் மேற்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கி சிறப்பித்தனர்.
மேற்படி ரத்ததான முகாமில் பட்டுகோட்டை மனோரா ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இரத்ததான நிகழ்வின் முடிவில் பட்டுகோட்டை மனோரா ரோட்டரி சங்க செயலாளர் சிவசரவணன் நன்றி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




