ராமர் என்றால் அன்பு, இரக்கம், நீதி என பொருள் : ராகுல் காந்தி
ராமர் என்றால் அன்பு, இரக்கம், நீதி என பொருள் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில் அது தொடர்பாக ராகுல் காந்தி ஹிந்தியில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் ராமர் என்றால் அன்பு, இது ஒருபோதும் வெறுப்பை தோன்றாது, ராம் என்றால் கருணை, இது ஒருபோதும் கொடூரமாக தோன்ற முடியாது, ராம் என்றால் நீதி இது ஒருபோதும் அநீதியில் தோன்ற முடியாது எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருக்கிறார். இராமபிரான் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு என்று ராகுல் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆரம்ப காலம் தொட்டே ஒரு மாதம் ஒரு மதச்சார்பற்ற கட்சி ஆகவே தன்னை வெளிக்காட்டிக் வந்த காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தில் பிரிய காந்தியை தொடர்ந்து ராகுல் காந்தியும் ராமர் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






