தமிழகத்தில் இன்று 1175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு… உயிரிழப்பு 112 ஆக அதிகரிப்பு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் திடீரென உயர்ந்த நிலையில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்தை ஒட்டியே பதிவாகி வருகிறது. இன்று சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து பதிவான நிலையில் சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்த நிலையில் பிற மாவட்டங்களில் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.
தொற்று பாதிப்பு
தமிழகத்தில் இன்று 5175 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,73, 640 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை பாதிப்பு எண்ணிக்கையை அதிகமாக 6,031ஆகும். இதனால் இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,14,815 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்து மொத்த பலி எண்ணிக்கை 4,461ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1, 044 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. செங்கல்பட்டில் 487, திருவள்ளுர் 472, காஞ்சிபுரத்தில் 342 என அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தபடியாக தேனியில் 278 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 200-க்கு கீழாக பதிவாகியுள்ளது ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளதாக தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







