--- --:--:-- --

இம்ரான் கான் தலைமையிலான பேரணி மீண்டும் ஒத்திவைப்பு..!

5

பாகிஸ்தானில் நாளை முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கான் தலைமையிலான பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஹாஜராபாத்தில் நடைபெற்ற அரசு பேரணியில் பங்கேற்று இருந்த பொழுது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

 

அதில் காயமடைந்த இம்ரான்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து மீண்டும் பேரணி தொடங்கும் என இம்ரான் கான் அறிவித்திருந்த நிலையில் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கட்சியினரின் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon