நடிகர் ரஜினி, திரைத்துறை பிரபலங்கள், தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்
ஜனநாயகத் தேர்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வாக்குப்பதிவு, தமிழகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், ஷாலினி வாக்களித்துச் சென்றனர்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாகவே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற நடிகர் அஜித், ஷாலினி இருவரும் 7 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டம் கூடாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதேபோல், சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி வாக்களித்து சென்றார். அங்கு காத்திருந்த செய்தியாளர்களுக்கு அவர் எந்த பேட்டியும் அளிக்கவில்லை.
ர்
நடிகர்கள் சிவக்குமார், அவரது மகன்கள் சூரியா, கார்த்தி ஆகியோரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதியுடன் ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார்.





