--- --:--:-- --

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை..!

8

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மக்கள் கூறுகையில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

 

இதுதவிர நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

நாளை கடலூர் மாவட்டங்களிலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

அரபிக்கடலில் லட்சத்தீவு, கர்நாடக கரையோரப்பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருவாடனையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon