ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படுகிறது..!
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படுகிறது. இதன்படி அதிகபட்சமாக ஒருவர் 17,951 ரூபாய் பெற முடியும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
11 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ள இந்த போனால் ரயில்வே துறைக்கு 2800 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
கொரொனா பேரிடர் காலத்தில் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்கவும், சரக்கு ரயில்களை இயக்கவும் பாடுபட்ட ஊழியர்களுக்கு வெகுமதியாக இந்த தொகை அமையும் என ரயில்வே அமைச்சகம் தன் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது.






