--- --:--:-- --

இன்று நடைப்பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி..!

16

ந்திய அரசியலுக்கும் நடைபயணங்களுக்குமான தொடர்பென்பது நீண்ட நெடியது. பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கும் கைகொடுத்துள்ளது. அந்த வகையில் தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்துள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக, கடந்தாண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டார். மக்களை நேரடியாக சந்தித்த ராகுல்காந்தியின் செல்வாக்கும் இதனால் வளர்ச்சி கண்டுள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

 

அந்த நடைபயணத்தின் நீட்சியாக, மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி இன்று நண்பகல் தொடங்குகிறார்.மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தௌபால் மாவட்டத்தில் உள்ள போர் நினைவிடத்தில் இருந்து ஆரம்பிக்கும் யாத்திரையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

 

6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரையின் பெரும்பகுதி பேருந்து மூலமும், ஆங்காங்கே நடைபயணமாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.15 மாநிலங்களில் உள்ள 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டமன்றத் தொகுதிகளை கடந்து, மார்ச் 20 அல்லது 21 ஆம் தேதி மும்பையில் யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்க மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நிகழ்ந்த அநீதிகளை அம்பலப்படுத்தும் நோக்கில் இந்த யாத்திரை அமையும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon