முதல்வர் பற்றி ட்விட்டரில் அவதூறு பரப்பியவருக்கு தண்டனை..!
முதலமைச்சரைப் பற்றி சமூக ஊடகத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு 48 நாட்களில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் தண்டனை பெற்று தந்துள்ளனர்.
சென்னை கேகே நகரை சேர்ந்த அரவிந்த் நாகராஜன் என்பவர் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் பற்றியும் தமிழக காவல்துறையை பற்றியும் நாகரிகம் மற்றும் முறையில் சமூக ஊடகத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
இது குறித்து அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைதான பதினைந்து நாட்களில் சாட்சியங்கள் ஆதாரங்களை திரட்டி சென்னை எழும்பூர் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் சைபர் க்ரைம் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அதன்படி அவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு 17 நாட்கள் சிறை தண்டனையும் 6500 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





