புதுக்கோட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியும், காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமாரும் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேசிய இருவரும் கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அறந்தாங்கி அருகே உள்ள சிறுமியின் சொந்த ஊரான அவரது கிராமத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற ராஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







